Ad Widget

வீட்டுக்காரர்களின் அசண்டையீனத்தால் ஒன்றரை மாதக் குழந்தை பலி!!

வீட்டுக்காரர்களின் அசண்டையீனத்தால் ஒன்றரை மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் புதன்கிழமை இரவு ஊரெழு மேற்கில் இடம்பெற்றுள்ளது.

புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் தாயார் பிள்ளைக்கு பால் கொடுத்து தலையணையில் உறங்கவைத்துவிட்டு உடுப்பு துவைப்பதற்காகச் சென்றுள்ளார்.

தலையணைகள் இன்றி ஒரு தலையணையில் கிடத்தப்பட்ட பிள்ளை, தலை திரும்பி முகம் குப்புற கவிழ்ந்தமையால் அது மூச்சுச் திணறி உயிரிழந்துள்ளது.

காந்தன் சந்தோஸ் என்ற ஒன்றரை மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது.

இரவு 7 மணியளவில் பிள்ளை வளர்த்தப்பட்ட இடத்துக்குச் சென்று பார்த்தபோது பிள்ளை குளிர்ந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் வைத்தியர் ஏற்க மறுத்த நிலையில் பிள்ளையை அவசரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

அங்கு பிள்ளை இறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்திய நிலையில் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரயையை மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Posts