Ad Widget

வீடுகளில் வைத்து மதுபானம் அருந்தினால் பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை – பொலிஸ்

யாழ்ப்பாணத்திற்கு என்று ஓர் கலாசாரம் நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்றது.அதாவது, வீடுகளில் மதுபானங்களை அருந்துவது முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கிறது.அதனாலேயே சந்திகளிலும், வீதிகளிலும் இளைஞர்கள் கூடி மதுபானங்கள் அருந்துகின்றனர் என்று கொடிகாம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக்க பண்டார தெரிவித்தார்.

நேற்றயதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் இன்று யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

வீடுகளில் மதுபானங்களை கொண்டு சென்று குடிக்க முடியாது அதுதான் வீதிகளிலும்,சந்திகளிலும் நின்று குடிக்கிறோம் என்று இளைஞர்கள் பலர் தமது ஆதங்கங்களை எம்மிடம் கூட வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பணக்காரர்கள் மதுபானங்கள் அருந்துவதற்கு பெரிய ஹோட்டல்களை நாடி அங்கு சென்று குடிக்கிறார்கள்.ஆனால் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் குடிப்பதற்கு வசதிகள் அற்ற நிலையிலும்,வீடுகளில் குடிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் வீதிகளிலும்,சந்திகளிலும் நின்று குடிக்கிறார்கள்.

இவ்வாறு வீதிகளிம்,சந்திகளிலும் கூடி நின்று குடிப்பதால் இருவருக்கு இடையே ஏற்படும் சிறு கசப்பான வார்த்தை பிரியோகங்களும் இறுதியில் வாள்வெட்டில் முடிவதற்கு காரணமாக அமைகின்றது.

ஆகவே நான் வீடுகளில் வைத்து மதுபானங்களை அருந்துங்கள் என்று கூறவில்லை.வீதிகளில் நின்று குடிப்பதை விட வீடுகளில் குடிப்பதால் பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை என்பதையே நான் கூற முற்படுகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts