Ad Widget

வீசா இறப்பர் முத்திரைக்கு பதிலாக இனி ஸ்டிக்கர்

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வழங்கப்படும் வீசா அனுமதிப்பத்திரத்தில் இறப்பர் முத்திரைக்கு பதிலாக ஸ்டிக்கர் ஒட்டும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது அவர்களுக்கு வீசா வழங்கப்படும் நடைமுறை ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது.

இதன்படி குறித்த விசாவில் இதுவரை இறப்பர் முத்திரையே பொறிக்கப்பட்டு வந்தது. எனினும் மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் பாதுகாப்பான ஸ்டிக்கர் ஒட்டும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சர்வதேச தரத்திற்கு அமைய இந்த முத்திரைகள் அச்சிடும் பணிகள் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.பல நாடுகளில் இந்த ஸ்டிக்கர் முறைமை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts