Ad Widget

விஸ்வரூபம் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகும்: இலங்கையிலும் விரைவில்!

‘விஸ்வரூபம்’பெப்ரவரி 7ஆம் தேதி (வியாக்கிழமை) வெளியாகிறது. இதை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இது குறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் வியாக்கிழமை 7ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.நீதி சற்றே நின்று வந்தாலும் அன்றே ஆனவனவெல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்தமைக்கு மான்புமிகு முதலமைச்சர்க்கு நன்றி.

எல்லாவற்றிர்க்கும் மேலாக தமிழக இந்திய மக்களுக்கும் என்னை தேடி வந்து ஆறுதல் சொன்ன தமிழ் திரையுலக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், எனக்கும் தெரியாமலே எனக்காக போராடிய அகில இந்திய திரையுலகிற்கும் நன்றி.

என் உரிமையைத் தமதெனக் கருதி பெரும் போர்க்குரல் எழுப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்திற்கும் ஒரு இந்தியனாக ஆழ்மனதிலிருந்து நன்றி.எதற்கும் கலங்காது புன்னகையுடன் இன்னல்களை ஏற்ற நான், ஒரு நிகழ்வினால் நெகிழ்ந்து, காதலாகி, கண்ணீர் மல்கி நிற்கின்றேன். என் தமிழக மக்கள் காசோலைகளையும், பணத்தையும் தபால் மூலம் அனுப்பி வைத்து கலங்காதீர் “யாமிருக்க பயமேன்” என்ற அர்த்தத்தில் கடிதங்கள் இணைத்து அனுப்பி உள்ளனர். நெஞ்சு விம்மிக் கண்ணீர் காட்சியை மறைக்க என் மனது “இயங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று கேவிக் கேவிப் பாடியது.

என் கலையையும் அன்பையும் மக்கள் நலன் பயக்கும் சிறு தொண்டுகளையும் அன்றி வேறொன்றும் செய்வதறியேன்.காசோலைகளையும் பணத்தையும் அன்புடன் திருப்பி அனுப்புகிறேன். உங்கள் விலாசங்கள் என் வசம். நாளை மதமும், அரசியலும் என்னை வரியவனாக்கினாலும் உண்பதற்கும் ஒதுங்குவதற்கும் அறிய பல விலாசங்கள் என் கைவசம் உள்ளது என்ற தைரியத்தில் இதை செய்கிறேன். நான் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் என் நிரந்தர விலாசம் உங்கள் இனிய மனங்களே.

பொறுமை காத்த என் ரசிக நற்பணியாளர்களுக்கு பெருவணக்கம். நற்பணி மன்றம் என்ற பெயர் காரணத்தை செயலாக்கிக் காட்டி ரெளத்திரம் பழகாமல், அகிம்சை பழகிய உங்கள் வீரம் சரித்திரத்தில் இடம்பெறும்.வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை என்பதை ஊருக்கு எடுத்துக்காடிய என் ரசிக சகோதரர்களின் விஸ்வரூபத்தை வணங்கி, யாம் தயாரித்த விஸ்வரூபத்தை அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

வாழிய செந்தமிழ் வாழ்க நாற்தமிழர். வாழிய பாரத மணித்திரு நாடு.இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ‘இலங்கையில் இந்தப் படத்தை வெளியிடுவதில் தடைகள் ஏதும் இருக்காது என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். ஏனென்றால் இந்தப் படத்தில் எந்தவொரு மதத்தவருக்கோ இனக்குழுக்களுக்கோ அநீதி ஏற்படுத்தும் விதத்தில் ஏதும் இல்லை என்பதுதான் எமது கருத்து’ என்று இலங்கையில் வெளியாகும் படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கைச் சபை தலைவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.எனவே தமிழகத்தில் தடை நீங்கியதனை அடுத்து இலங்கையிலும் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts