Ad Widget

விவசாய உற்பத்திகளின் வளர்ச்சியில் பழங்களின் உற்பத்தி அதிகரிப்பு: யாழ்.மாவட்ட செயலகம்

Fruits-palangalயாழ்.மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளின் வளர்ச்சியில் பழங்களின் உற்பத்தி பாரிய வளர்ச்சி கண்டுள்ளது என யாழ் மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் 157 ஹெக்டயர் நிலப்பரப்பில் பப்பாசிச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 4396 மெற்றிக் தொன் உற்பத்தி கிடைத்துள்ளது இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இந்த பழ உற்பத்தியானது, தேசிய உற்றபத்தியில் மாவட்டத்தின் பங்களிப்பாக 5.20 வீதத்தை கொண்டதாக காணப்படுகிறது.

இதே போல் திராட்சைப் பயிர்ச்செய்கையும் பாரியளவில் வளர்ச்சி கண்டுள்ளதுடன் இந்த வருடம் 130 ஹெட்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட திராட்சையின் மூலம் 3900 மெற்றிக்தொன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மற்றும் வாழைப் பயிர்ச் செய்கையின் அளவும் அதிகரித்துள்ளதுடன் இந்த வருடம் 1076 ஹெக்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட வாழைப்பயிர்ச் செய்கையின் மூலம் 27,976 மெற்றிக் தொன்னாக உற்பத்தி அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts