Ad Widget

விமர்சனத்திற்குள்ளாகியுள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் சைவநெறி பாடநூல்.

கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் சைவநெறி புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தரம் 6,10 இலவச பாடநூல் 2015இல் வெயிடப்பட்டிருந்தது. இருந்தும் அப்பாடநூல்களில் பல்வேறு பிழைகள் இருப்பதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதற்கிணங்க கல்வி வெளியீட்டுத்திணைக்களம் அப்பிழைகளை ஏற்றுக் கொண்டு தற்போது பாடநூலின் திருத்தங்களை உள்ளடக்கிய இணைப்பு ஒன்று அனுப்பிவைக்கபட்டு வருகின்றது. இருந்தும் பாடசாலைச் சமூகம் அவற்றை உரிய முறையில் பயன்படுத்தவில்லை

2017 இல் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் தரம் 8 க்கான பாடத்திட்டங்கள் பூர்த்தியாக்கப்பட்டு தற்போது கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் பாடநூல் தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சைவநெறி பாடநூல் தொடர்பாக தரமான எழுத்தாளர்களைக் கொண்டு பாடநூல் தயாரிக்கவில்லை எனவும் எதிர்வரும் காலங்களில் குறித்த பாடத்துறையில் நீண்ட கால அனுபவமும் நிபுணத்துவமும் கொண்டவர்களை உள்ளடக்கியே பாடநூல் தயாரிக்கப்பட வேண்டுமென பாடசாலைச் சமூகம் எதிர்பார்த்திருந்தவேளை அந்த எதிர்பார்ப்பை கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் குறித்த சைவநெறி பாடத்திற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள அதிகாரி அவற்றை உதாசீனம் செய்யும் வகையில் தனக்கு உறவு முறையானவர்களையும் பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடாத குறித்த பாடத்துடன் எவ்விதமான தொடர்புகளோ அனுபவமோ, நிபுணத்துவமோ இல்லாதவர்களைக் கொண்டு பாடநூல் தயாரிக்கப்படுவதாக அறிய வருகின்றது
2007ஆம் ஆண்டில் தரம் 7, 11 பாடநூல் தயாரிக்கும் போது எழுத்தாளர் குழுவினரை பத்திரிகைச் செய்தியூடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவர்களுக்கு அவர்களின் பாடநிபுணத்துவம் எழுத்துத்திறன் என்பவற்றை பரிட்சித்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத் தேர்வும்; நடாத்தப்பட்டே எழுத்தாளர் குழுவினர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

குறிப்பாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட எழுத்தாளர் குழுவினரை தெரிவு செய்யும் போது எவ்வாறு தெரிவு செய்வது என்பது பற்றிய சுற்றுநிருபம் திணைக்களத்தில் இருக்கத்தக்கதாக பாடத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி அவற்றை கணக்கிலெடுக்காது தன்னிச்சயாக செயற்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது .

மேலும் சைவநெறிப் பாட ஆலோசகராக நியமிக்கப்பட்டுவர் இந்துவாகப் பிறந்து வேற்று மத்தினர் ஒருவரை திருமணம் செய்துள்ளவர் என்றும் . இவர் எவ்வாறு சைவவெறிப் பாடத்திற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது

எனவே இத் தெரிவை உடனடியாக நிறுத்திப் பாட அனுவமும் பாடநிபுணத்துவமும் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளடக்கப்பட வேண்டும். பாட ஆலோசகர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள் குறித்த பாடத்துறையில் உள்ள ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்றும்

இச் செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்தி உரிய முறையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டடும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

 

Related Posts