Ad Widget

விநாயகர் ஆலயத்தை காணவில்லை

tellippalai - army-saraஉயர்பாதுகாப்பு வலயமான மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தினை தற்போது காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார்.

சென்ற வருடம் ஆலயத்திற்குச் செல்ல இராணுவத்தினரால் அனுமதியளிக்கப்பட்ட போது, மருதடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு தானும், தனது மனைவி பிள்ளைகளும் சென்று பொங்கல் செய்து வழிபட்டதாகக் கூறினார்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (11) மயிலிட்டிக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டு சென்று பார்த்த போது, மருதடிச் சித்தி விநாயகர் ஆலயம் முழுமையாக அழிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

ஆலயம் இருந்த இடத்தினை அருகில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்றினை வைத்தே அடையாளப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவம் அனுமதியளித்துச் சென்று பார்த்த போது, காணிக்கை மாதா ஆலயம் என்ற ஆலயம் இருந்ததாகவும், தொடர்ந்து கடந்தாண்டு (2013) சென்று பார்த்தபோது, அந்த ஆலயம் இருந்த இடமே தெரியாமல் அழிக்கப்பட்டிருந்ததாக அங்கு வந்த ஒருவர் கூறினார்.

மேலும், மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயத்தினைச் சூழவிருந்த வீடுகள் அனைத்தும் தற்போது இடிக்கப்பட்டு வீடுகள் இருந்த அடையாளமே இல்லாதிருப்பதாக மயிலிட்டி மக்கள் தங்கள் ஆதங்கங்களைத் தெரிவித்தனர்.

தற்போது, மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயமும், அதன் அருகிலுள்ள தோப்புப் பிள்ளையார் ஆலயம் மற்றும் முருகன் ஆலயம் ஆகியன மட்டும் எஞ்சியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Posts