Ad Widget

வித்தியா வழக்கு குற்றவாளிகளை தப்பிக்க வைக்க தவராஜா முயற்சி – துவாரகேஸ்வரன்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் வகையில் சட்டத்தரணி கே.ரி.தவராஜா வழக்கில் ஆஜராகியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட 9வது சந்தேகநபரை தப்பிக்க விடும் வகையில் பொலிஸாரின் பி அறிக்கை இருந்தது.

பிரபல சட்டத்தரணி என கறுப்பு கோட் போட்டு வந்த கே.ரி.தவராஜா வித்தியாவின் குடும்பத்தின் சார்பாக வாதாடுவதாக கூறிக்கொண்டு, எதேச்சதனமாக செயற்படுகின்றார் என பகிரங்கமாக கூறுகின்றேன்.

சுட்டத்தரணியாக வாதாடுவதற்கான அத்தாட்சி வித்தியாவின் குடும்பத்தினரால் வழங்கப்படாத நிலையில் சட்டத்தரணி கே.ரி. தவராஜா வாதாடுகின்றார்.

வித்தியாவின் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவ்வாறு கடைசியில் நியாயம் கிடைக்காவிடின், யாழ். மாவட்டத்தில் உள்ள 8 இலட்சம் மக்களுக்கும் கடல் தான் தஞ்சமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் வாழ்வில் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது. இதை தெரிவித்தமைக்கு எத்தகைய உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்க போவதில்லை, எனக் கூறியுள்ளார்.

Related Posts