Ad Widget

வித்தியா கொலை வழக்கு – ட்ரயல் அட்பார் நீதிமன்றில்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரிக்க ட்ரயல் அட்பார் (நீதிபதிகள் அடங்கிய விசாரணை மன்று) நீதிமன்றம் அமைக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்றிருந்த அவர் யாழ்.மேல்நீதிமன்றில் நீதிபதிகள், நீதிவான்கள், சட்டத்தரணிகளுன் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட குற்றச் சம்பவம் பற்றிய பொலிஸ் விசாரணை நிறைவடையும் நிலையில் உள்ளது.

அந்த வழக்கு விசாரிக்க ட்ரயல் அட்பார் முறையிலான நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. அந்தக் குழு குறித்த வழக்கை விசாரிக்கும் என்றார்.

Related Posts