விடுதியொன்றிலிருந்து இளம் ஆசிரியையின் சடலம் மீட்பு!!

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா, பொலனறுவை – மின்னேரியா பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபையின் உறுப்பினராகவும் பணியாற்றி வந்த இவர், கல்வி மற்றும் கலைத்துறைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னேரியாப் பகுதியில் உள்ள தங்கும் விடுதியிலிருந்து இவர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்துத் தகவல் அறிந்த அப்பகுதிப் பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மும்முரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts