Ad Widget

விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்!

இறுதிப்போரில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மறைந்து வாழ்கின்றனர் என்பது உண்மைதான். – இவ்வாறு தெரிவித்துள்ளார் தகவல் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல.

Keheliya-Rambukwella

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான அருண் செல்வராஜன் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களை வளர்த்ததும் இந்தியாதான். பிரபாகரனைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கியதும் இந்தியாதான். அதே புலிகளின் ஒருசிலர் இன்று பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுகின்றனர்.

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான அருண் செல்வராஜன் குறித்து இந்திய புலனாய்வு அதிகரிகள் இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம். விடுதலைப்புலி உறுப்பினர்கள் தீவிரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முயறிசிக்கின்றனர். இவர்களால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஆபத்துள்ளது. நாம் புலிகளை மீள அணிதிரள ஒருபோதும் இடமளிக்கமாட்டோம், அத்துடன் இந்தியாவும் கவனத்துடன் இருக்கவேண்டும். – என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts