Ad Widget

விசேட அமைச்சரவைக்கு 18 சிறுபான்மை கட்சிகள் யோசனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கின்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது, 18 சிறுபான்மை கட்சிகள் தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளன.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

இந்த கூட்டத்தின் போதே தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக 18 சிறுப்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்செட்ச் ஹோட்டலில், நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அந்த 18 கட்சிகளின் பிரதிநிதிகளும் மேற்கண்ட தீர்மானத்தை தெரிவித்தனர்.

இந்த, ஊடகவியலாளர் மாநாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, தொழிலாளர் தேசிய முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி,ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, நவ சம சமாஜ கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கூட்டமைப்பு, ஐக்கிய சோஷலிஸ கட்சி, மலையக மக்கள் முன்னணி, சிறி டெலா ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளே பங்கேற்றனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது வழங்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேர்தல் மறுசீரமைப்பு சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள நிலையில், சிறுபான்மையினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

அது மட்டுமல்லாது, தேர்தலின் போது வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இரட்டை வாக்களிக்கும் முறைமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதுடன் இதற்கு இணங்காத பட்சத்தில், 20ஆவது சீர்திருத்தத்துக்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்று அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.

Related Posts