Ad Widget

விசா மோசடி கும்பலுக்கு சமூகவலைத்தள எதிர்ப்பும் வேடிக்கையான எதிரொலியும்!

மோசடி நிறுவனத்துக்கு எதிராக முகப்புத்தகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரால் பரவிய செய்தி இதுதான் (அவருடைய பேச்சு மொழி திருத்தப்பட்டுள்ளது)

திசைகாட்டுகின்றோம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் விசா பெற்றுத்தருகிறோம் என்று ஒரு நிறுவனம் புறப்பட்டுள்ளது அது தொடர்பான எச்சரிக்கைதான் அது…

விண்ணப்பம் மட்டும் நிரப்புவதற்கு ஒருவரிடம் 70,000 ரூபா வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரோ திசைகாட்டும் நிறுவனமே  தனக்கு விசா வாங்கி கொடுத்ததாகவும் அதனால் தான் தான் பிரித்தானியா செல்வதாகவும் கூறினார் அதை நம்பிய நான் திசைகாட்டும் நிறுவனம்  மூலம் எனது மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடிவுசெய்தேன் திசைகாட்டும் நிறுவனத்தின் வரவேற்பாளரால் அமோக வரவேற்பு தரப்பட்டது

அவர் ஒரு படிவம் ஒன்றை தந்தார் அதில் மாணவர் விசாவுக்கு கட்டணம்ரூ 150,000 என அறிவித்திருந்த நிலையில் கையில் இருந்த ரூ 500 யும் வாங்கிக்கொண்டு ஒரு அறையில் அனுமதித்தார்கள் . நிர்வாகி தானே செய்வதாகவும் மிக இலகு என்றும் இரண்டே வாரத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்றுத்தருவதாகவும் கூறினார். அத்தோடு எனது உறவினரை தனக்கு தெரியும் என்றும் தானே எல்லா வேலைகளையும் செய்துதருவதாக கூறினார்.சரி பார்ப்போம் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்

பின்பு எனது தொலைபேசியில் அவரே நேரடியாக தொடர்பு கொண்டார் காலம் நெருங்கிவிட்டது விரைவாக பணத்தை செலுத்தும்படி கூறினார் ஒரு எழு எட்டு தடவைகளுக்கு மேல் அழைப்பை ஏற்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். பணம் என்று கட்டி முடித்தேனோ அன்றுடன் அவரது தொலைபேசி அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது வேறுகதை.

சரி ரூ 350,000 பணத்தை வட்டிக்கு எடுத்துக்கொண்டு சென்றேன் அது கம்பனிக்கு என்றும் மீதி ரூ 11,50,000  லண்டனில் ஒரு பல்கலைக்கழகத்தில் Master Degree அனுமதிக்குரியது என்றார்.

இரண்டே கிழமைகளில் எல்லாம் முடிந்துவிடும் 350,000 கட்டுங்கள் லண்டனில் Master degree மொத்தகற்கை நெறிக்கு 1150000 LKR கட்டணத்துடன் விசா பெற்று தருகிறேன் என்று பேச்சுக்காட்டியபடியே இருக்க வரவேற்பாளர் தெளிவே இல்லாத ஒருபற்றுச்சீட்டை நீட்ட இவர் இரண்டு கிழைமையில் எல்லாம் முடிந்துவிடும் என்று சொல்ல இரண்டு மாத உடன்படிக்கையில்  கையெழுத்தை வாங்கிகொண்டு முற்பணத்தை பெற்றுவிட்டார்கள்

பின்பு திசைகாட்டும் நிறுவனத்தில் இருந்து எந்த அழைப்புமே எனக்கு கிடைக்கவில்லை மனம் நொந்த நான் அழைப்பை ஏற்படுத்தினேன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன். எந்த பதிலும் இல்லை இறுதியாக ஒரு பல்கலைகழகத்தின் பெயரை   சொன்னார்கள் அடுத்தஅதிர்ச்சியும் எனக்கு காத்திருந்தது .அந்த பல்கலைக்கழகத்தில் அப்படி ஒரு கற்கைநெறியே இல்லை நான் ஏமாற்றப்படுவதை பின்னர் உணர்ந்த நான் நானாகவே லண்டனில் உள்ள சில பிரபலமான பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்தேன். எண்ணி ஆறே நாட்களில் எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது .இவற்றுடன் திசைகாட்டும் நிறுவனத்திற்கு சென்றேன். இந்த கிழமை மாத்திரம் பொறுங்கள் முடியாவிட்டால் பணத்தை திருப்பி திங்கள் அன்று தருவதாக சொன்னார்கள்.

இதற்கிடையில் 3 கிழமை ஆகிவிட்டதால் பணத்தை திருப்பி பெற அழைப்பை ஏற்படுத்தினேன் வரவேற்பாளரோ மிகக்கேவலமாக கீழ்த்தரமாக நடந்துகொண்டார்.  கோபமடைந்த நான் உடனடியாக அங்கு சென்றேன் . வரவேற்பாளர் மிக அருவருக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார் . என்னிடம் பணம் வாங்கியவரும் எனது விண்ணப்பத்திற்கு பொறுப்பாளி என்று கூறிய பெண்ணும் என்னை யார் என்றே தெரியாதவர்கள் போல் வந்து சென்றார்கள்.

சற்று பின் என்னிடம் பணம் வாங்கிய அந்த நிர்வாகி என்னை அழைத்து மங்கலான அந்த துண்டு சீட்டில் எனது பணம் டிசெம்பர் 10 திகதி தான் திருப்பி அளிக்கப்படும் என்று கூறினார். அத்துடன் இடைக்கிடையில் சட்டத்தரணியே பல்கலை கழகத்தில் அனுமதி பெற்று தருவதாக கூறினான்.அப்போதுதான் அதை அவதானித்த நான் அதிர்ச்சியில் உறைய அவரது முகத்தில் புன்னகை தவழ்ந்ததை கூட அவர் மறைக்க வில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிய நான் ரூ 11,50000 க்கு லண்டனில் master degree செய்யவும் முடியாது எல்லாம் தெரிந்தும் கையெழுத்தால் என் பணத்தை திரும்ப பெற முடியாமல் எனக்கு வந்த வேறு வாய்ப்புகளையும் நழுவ விட்டு விட்டு செய்வதறியாது நிற்கிறேன்

என்னை திசை திருப்பி கையெழுத்தை வாங்கிவிட்டார்கள் . ஆனால் என் போன்ற நடுத்தர,ஏழை வர்க்கத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் இதை எழுதுகிறேன் தயவு செய்து பேச்சை கொடுத்து கையெழுத்தை வாங்கி கொண்டு கழற்றி விடுவார்கள் அவதானமாக இருங்கள். உங்களுக்கு பல்கலைகழக அனுமதி வேண்டுமாயின் குறிப்பிட்ட பல்கலைக்கழக பக்கத்தில் நாட்டுக்குரிய பக்கத்தில் இலங்கை பிரதிநிதி உள்ளார் அவர் இலவசமாகவே செய்தது தருவார்

இப்படிப்பட்ட நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள் .கிடைக்காது என்று நூறு வீதம் தெரிந்த ஒரு விசயத்துக்கு பணத்தை செலுத்திவிட்டு இருக்கும் வாய்ப்புகளையும் இழந்து நடுத் தெருவில் நிற்கிறேன் வட்டி கட்டிக்கொண்டு.திசைகாட்டியின் இயக்குனர் என்று கூறும் நபர் மிக கேவலமாக நடந்து கொண்ட நிமிடங்கள் எனது கைத்தொலை பேசியிலும் பதியப்பட்டுள்ளது அத்துடன் அவரது அறையில் உள்ள CCTV கமேராவில் பதிவு செய்யப்பட்ட நேரத்தையும் குறித்துவைத்துள்ளேன் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் இது குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளேன் .நான் இழந்தது எதுவாகவும் இருக்கலாம். யாழ் மண்ணில் இப்படிப்பட்ட  ஏமாற்றுக்காரர்களுக்கு எப்போதுமே இடம் கிடையாது என்பதை இப்படிப்பட்டவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

திசைகாட்டும் நிறுவனத்தின் கவர்சியான விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள். உங்களால் முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். இவ்வாறு அந்தக்கட்டுரை நிறுவனரின் படத்துடன் இருந்தது.

இதுவரை காலமும் பத்திரிகைகளில் பெருமளவான விளம்பரங்களை இட்டு இணைய அறிவு அற்ற வெளிநாடு செல்லும் ஆர்வமுள்ள இளைஞர்களை குறிவைத்து இலவச விண்ணப்பபடிவத்தை நிரப்பி கொடுப்பதற்கு கூட எழுபது ஆயிரம் கறந்ததாக பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்ட இந்நிறுவனம் சமூகவலைத்தளங்கள், இணையத்தளங்கள் உண்மைகளை பகிரங்கப்படுத்தியதையடுத்து பத்திரிகை விளம்பரங்களில் ”facebook மூலம் முதுகில் குத்தவேண்டாம்“ என வெளியிட்டு வருகின்றனர்.

இவர்களிடம் ஏமாறுவது பெரும்பாலும் எவ்வளவு கொடுத்தாவது வெளிநாட்டுக்குபோய் உழைத்துவிடவேண்டும் என்ற மனநிலை கொண்ட அப்பாவி இளைஞர்கள் யுவதிகளே! இதுவரை ஏமாந்தவர்களைவிட தற்போது பாதிக்கப்பட்ட இளைஞர் இணையவழி சமூக வலைத்தளங்கள் ஊடாக  தன் நண்பர்களுக்கு தன்னை ஏமாற்றியதை விளக்கி எச்சரிக்க ,வேறு ஏமாந்த இளைஞர்கள் இதை ஆமோதிக்க மற்றயவர்களும் ஏமாறாது இருக்க பெருமளவு இளைஞர்கள் பகிர, சிக்கி கொண்டனர் திசைகாட்டும் விசா நிறுவனத்தினர்.

பாதிக்கப்பட்ட இளைஞர் தம்மை ஏமாற்றிய இந்த நிறுவனத்தை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் காவல் துறையினரிடமும் முறையிட்டதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இளைஞர்களின் கருத்துக்களின் எதிரொலிகளாக விளம்பரங்களில் ”முற்பணம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என தெரிவித்துள்ளனர்.

தவிர இவர்களிடம் செல்லும் இளைஞர்களுக்கு இவர்கள் கையெழுத்து பெறும் நிபந்தனை ஆவணம் கடுந்தொனியில் எரிச்சலூட்டும் விதமாக இருக்கும் என்கிறார்கள் அங்கு சென்றவர்கள்.

தம்மை நல்லவர்களாக காட்டுவதற்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதாகவும் பத்திரிகைகளில் பெரிதாக விளம்பரம் செய்து வருகின்றனர்.  உதவி செய்பவர்கள் விளம்பரம் தேடமாட்டார்கள் என்பதே உண்மை.எனவே வாசகர்கள் இதனை இனங்கண்டு விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்

செய்தி மூலம் இங்கே

Related Posts