Ad Widget

வாள்வெட்டில் இருவர் படுகாயம்

சாவகச்சேரி பெருங்குளம் சந்தியில் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினார்கள்.

கெருடாவிலைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் (வயது 28), சிவகுமார் கோபன் (வயது 23) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். முன் பகை காரணமாக இவர்கள் இருவரும் வாளால் வெட்டப்பட்டதாகவும் சந்தேகநபர்களை கைது செய்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

Related Posts