Ad Widget

வாதப் பிரதி வாதங்களுடன் இடம்பெற்ற உடுவில் சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கிராம அலுவலர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பலத்த வாதப் பிரதி வாதஙகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த புதன்கிழமை உடுவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தலைமையில் கிராம அலுவலர்கள் மற்றும் தினைக்களத் தலைவர்கள் மற்றும் ஏனைய வெளிக்கள அலுவலர்களைக் கொண்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது தமது பிரிவுகளில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் சம்பந்தமாக சுட்டிக்காட்டப்பட்டதுடன் பொலிஸார் நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டுக்களும் கிராம அலுவலர்களினால் முன்வைக்கப்பட்டன. இதனை மறுக்க பொலிஸார் முற்பட்ட நிலையில் கிராம அலுவலர்கள் பல குற்றச்செயலகளை பட்டியலிட்டு காட்டமுற்பட்டதால் இந்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

குறிப்பாக புன்னாலைக்கட்டுவன் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் மற்றும் பெண்கள் மீது வீதிகளில் நின்று தகாத முறையில் நடந்து கொள்ளுதல் போன்ற பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

இதில் புன்னாலைக்கட்டுவன் தெற்கில் வாளால் வெட்ட வந்தவாகளிடம் இருந்த வாள் பறித்தெடுக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகின்றபோதிலும் வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.

அத்துடன் நீதிமன்றத்திலும் குறிப்பிட்ட சான்றுப் பொருள் சமர்ப்பிக்கப்படவில்லையெனவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டநிலையில் பொலிஸார் இதனை சமளித்துவிட்டு சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts