Ad Widget

வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள்

Nallur_Kandasamy_front_entranceநல்லூர் ஆலயச் சூழலிலுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் அறவிடுவதற்கு நேற்று வெள்ளிக்கிழமை (08) முதல் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.

நல்லூர் ஆலயச் சூழலிலுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் மோட்டார் சைக்கிளுக்கு 20 ரூபாவும், துவிச்சக்கரவண்டிகளுக்கு 10 ரூபாவும் என அதிகூடிய கட்டணம் அறிவிடப்பட்டு வருவது தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மேற்படி கூடிய கட்டணங்கள் அறிவிடுவதற்கு மாநகர சபை அனுமதி வழங்காது. மாநகர சபையினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அளவிற்கேற்ப துவிச்சக்கரவண்டிகளுக்கு 5 ரூபாவும், மோட்டார் சைக்கிள்களுக்கு 10 ரூபாவும் அறவிடமுடியும்.

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு விரும்பினால், அதிகூடிய தொகையாக 5 ரூபா அறவிடமுடியும். அதனை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், வாகனப் பாதுகாப்பு நிலையங்களின் கட்டணங்கள் தொடர்பில், ஒவ்வொரு வாகனப் பாதுகாப்பு நிலையங்களின் வாயில்களிலும் மாநகர சபையினால் மேற்படி கட்டண விபரங்கள் தொங்கிவிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கு ஒவ்வொரு வாகனப் பாதுகாப்பு நிலையங்களிலும் தலா ஒவ்வொரு பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Related Posts