Ad Widget

வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!

வவுனியாவில் முன்னாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியும், சமூக சேவகருமான வி.விநோதரன் (ஈழம்) என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் சமூக சேவை அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு உட்புகுந்த மர்மநபர்கள் முன்னாள் போராளி மீது சராமரியாக தாக்குதல் நடத்தியுடன் அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts