வவுனியாவில் பேரணி, கண்டனக் கூட்டத்திற்கு தடை

தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி வவுனியா நகர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணி பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளது.

vavuniya-muslim

இன்று வவுனியா நகரில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் முஸ்லிம் கடைகள் மாத்திரமே பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்களும் பள்ளிவாசல் தலைவர்களும் நகர்ப் பகுதியில் நடத்தினர்.

இவர்கள் ஊர்வலமாகச் சென்று வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்த முற்பட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியாவில் அனைத்துச் சமுகத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். அந்த அமைதியைக் குழப்ப வேண்டாம். நீங்கள் விரும்பினால் கடைகளைப் பூட்டி அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள். பொது இடங்களில் கூடி குழப்பம் விளைவிக்க வேண்டாம்’ என்று கூறியதைத் தொடர்ந்து அங்கு கூடியவர்கள் கலைந்து சென்றனர்.

Related Posts