Ad Widget

வழித்தட அனுமதி கட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் பயணிகள்

யாழ்ப்பாணம் – கொழும்புக்கான பஸ் சேவையை மேற்கொள்வதற்கான வழித்தட அனுமதியற்ற பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இதன்போது பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு பொலிஸார் பொறுப்பல்ல எனவும் யாழ்ப்பாண பொலிஸார் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பரீட்சைகள் எழுதுவதற்காகவும், நேர்முகத் தேர்வுகளில் தோற்றுவதற்காகவும் செல்வோர் இதனால் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுநாள் நடைபெறவிருக்கும் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றிற்கு முதல்நாள் இரவு பஸ்களிலேயே பெரும்பாலானவர்கள் தங்கள் பயணங்களை மேற்கொண்டு கொழும்பு செல்கின்றனர்.

அவர்கள் பயணம் மேற்கொள்ளும் பேருந்து வழித்தட அனுமதிப்பத்திரமில்லை என்றால், அது இடைநடுவில் பொலிஸாரால் மறிக்கப்பட்டு தொடர்ந்து பயணிப்பதற்கான அனுமதி மறுக்கப்படும்.

இதனால், மேற்கண்ட நோக்கங்களுக்காக கொழும்பு செல்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவேண்டி ஏற்படுவதுடன், சில வேளைகளில் அவற்றில் பங்குபற்ற முடியாத நிலைகள்கூட ஏற்படுகின்றன.

இது தொடர்பில் பொலிஸாரிடம் கேட்டபொழுது, வழித்தட அனுமதியுள்ள பஸ்களின் இலக்கத்தகடுகளின் இலக்கங்களை தருகின்றோம். அந்த பஸ்களில் பயணங்களை மேற்கொண்டு சிரமரங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் என கூறினர்.

எனினும், இது நடைமுறை சாத்தியமற்ற விடயம். கொழும்பு செல்ல வேண்டும் என்றால் முதலில் பஸ்களின் இலக்கங்களை எங்காவது தேடி, பரிசோதித்த பின்னரே பஸ்களில் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது அனைத்து பயணிகளாலும் பின்பற்ற முடியாது. இது தொடர்பில் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறு, நிலையான ஒரு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என பயணிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலில் 22 பஸ்களுக்கு வழித்தட அனுமதியிருப்பதாகக் கூறிய பொலிஸார், சனிக்கிழமை (13) மாலை இலக்கங்கள் வெளியிடும் போது 39 பஸ்களின் இலக்கங்களை வெளியிட்டனர்.

யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபவடுவதற்கு வழித்தட அனுமதியுள்ள பேருந்துகள் என பொலிஸார் வெளியிட்டுள்ள பஸ்களின் இலக்கத்தகட்டு இலக்கங்கள் வருமாறு,

WP JF 5666, WP NB 7043, WP NB 2259, WP ND 3965, WP NB 3266, WP NA 8947, WP ND 9365, WP ND 9829, CP NA 8546, NP NC 7575, WP ND 8145, NU ND 6284, WP NB 6350, WP NB 0412, SP NB 6293, NC NA 8551, NC NA 7828, NP NA 9995, WP NB 4511, WP ND 7896, WP NB 5906, WP NB 6240, WP NB 8557, WP ND 8465, NP NB 3484, NW ND 9729, SP NA 8582, NC NA 8749, WP ND 8535, WP ND 1985, NP ND 7876, SP NA 8522, WP NB 0755, WP ND 9999, WP ND 2233, WP NB 6881, WP ND 7763, WP ND 9325, WP NB 0100

Related Posts