Ad Widget

வலி வடக்கு போராட்ட ஏற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு மாட்டு தலைகள், மலர்வளையங்கள் அனுப்பி வைப்பு

வலிகாமம் வடக்கு மக்களது போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்ற நிலையில் ஏற்பாட்டாளர்கள் பலருக்கும் நேற்றிரவு மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது.

maviddapuram-van

வடமராட்சியின் மீனவ சங்க தலைவர் அருள்தாஸினது வீடு தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது வாகனமும் அடித்து தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தனின் ஏற்பாட்டினில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்தித்து வலி.வடக்கு நில ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூக பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

அவர்களது பயணத்திற்கு வாகனம் வழங்கியமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாக கூறியே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் அயலவர்கள் திரண்டதையடுத்து தாக்குதலாளிகள் தப்பி ஓடியுள்ளனர்.

இதனிடையே வடமராட்சியின் பொலிகண்டி மற்றும் இன்பருட்டி பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் செயற்படும் வலி.வடக்கு மீனவ அமைப்புக்களது தலைவர்களிற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாட்டு தலைகள் வீடுகளிற்கு மலர்வளையங்கள் அனுப்புதலென அச்சுறுததல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வாகனங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களிற்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல்களையடுத்து அவர்கள் போராட்டகாரரர்கள் மாவிட்டபுரம் செல்வதற்காக வாகனங்களை வழங்க மறுத்துள்ளனர்.

இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் கால் நடையாக போராட்ட மையத்திற்கு நடந்து வந்தே பங்கெடுத்திருந்ததாக மற்றொரு தகவல் கூறுகின்றது.

Related Posts