Ad Widget

வலி – வடக்கில் படிப்படியாக மீள்குடியேற்றம்: நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர்

chandrakumar_epdpயாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் படிப்படியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடரும் என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் உள்ள மாவை கலட்டிப்பிரதேசத்தில் நடைபெற்ற குடிநீர் திட்ட விநியோக நிகழ்வில் சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்த பின்னர் எந்த பகுதியிலும் உயர்பாதுகாப்பு வலயங்கள் இருக்காது அத்தனை பகுதிகளும் விடுவிக்கப்டும் என்று ஜனாதிபதி தெரிவிததைப்போன்று வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்ப வலயமாக இருந்த 24 கிராமங்கள் விடுவிக்கப்ட்டடுள்ளது. ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது வலி வடக்கு பிரதேசம் வேகமான முன்னெற்றத்தைக்கண்டு வருகின்றது இப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டங்களில் பெருமளவான வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதார தேவைகளைப் பெறக்கூடிய வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு வருகின்றது.

யுத்ததிற்கு முந்திய காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களோ இதேபொன்ற ஒரு மாற்றம் ஏற்படும் என்றும் தங்கள் சுயலாப அரசியலுக்காக வீர வசனங்கள் பேசுபவர்களால் ஒரு துண்டு நிலத்தையேனும் மீட்டுத்தர முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts