Ad Widget

வலி.மேற்கில் புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிப்பு

வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சங்கானை பேரூந்து நிலையத்தில் போடப்பட்ட புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிக்கப்பட்டுள்ளது.

Chankanai

சிவத்தொணடர் அமைப்பு மற்றும் சைவ மகா சபையினரின் ஏற்பாட்டில் சங்கானை பேரூந்து நிலையத்தில் நேற்று முன்தினம் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்ட பதாகையே நேற்று இரவு விசமிகளால் கிழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சைவ மகா சபையின் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

வலி. மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் விசமிகளின் செயற்பாடுகள் இன்று நேற்றல்ல பல காலமாக கேட்பார் இன்றி நடைபெற்று வருகின்றது.

இந்த புகைத்தலுக்கு எதிரான பதாகை விழிப்புணர்வூட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த புகைத்தல் பழக்கத்திற்கு எதிர்கால சந்ததியும் அடிமையாகிவிடக் கூடாது.

எனவே இந்த நாச வேலைகளைச் செய்பவர்களை தட்டிக்கேட்டு சட்டத்தின் முன் நிறுத்த நிறுத்த வேண்டும். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி வலி.மேற்கு பிரதேச சபை தவிசாளர், பொலிஸார், சங்கானை பிரதேச செயலகம் ஆகியன இணைந்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் அவ்வூர் மக்கள் தெரிவிக்கையில்,

இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை இதற்கு முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை. அண்மையிலும் பஸ் நிலையத்திற்குள் வைத்திருந்த மர தளபாடங்கள் அடித்துடைக்கப்பட்டன.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் இவ்வாறான செயற்பாட்டிற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து வலி.மேற்கு தவிசாளர் திருமதி ஐங்கரனிடம் கேட்போது,

ஒரு விழிப்புணர்வு பதாகையினை கிழித்து நாசம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் வேதனையை ஏற்படுத்துகின்றது.

இது குறித்து தற்போது தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளோன் . நாளை எழுத்து மூல கடிதத்தினை வழங்கவுள்ளேன். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்படும் என்றார்.
இதேவேளை, புகைத்தல் வாரம் நேற்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts