Ad Widget

வலி.தென்மேற்கு தவிசாளரின் கோரிக்கையை அடுத்து பிரதேசசபைக் கட்டடம் பொலிஸ் பாதுகாப்பில்

வலி தென்மேற்கு பிரதேச சபையின் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வலி தென்மேற்குப் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக புதிய கட்டடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் படியாக பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசனால் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மானிப்பாய் பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இரவு நேரப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

உள்ளுராட்சி திணைக்களத்திடம் காவலாளிகளுக்கான பதவி நிர்ணய அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் வரையில் பாதுகாப்பு வழங்க வேண்டுமென பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலி தென்மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகக் கட்டடம் 45 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளது.
வலி. தெற்கு பிரதேச சபை கட்டிடம் திறக்கப்படவிருந்த நாள் அதிகாலையில் விசமிகளால் கழிவொயிலூற்றி நாசமாக்கப்பட்டதன் பின்னணியிலேயே தவிசாளாரினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts