Ad Widget

வலி. கிழக்கு வரவு – செலவுத் திட்டம் வர்த்தமானி ஊடாக நடைமுறைக்கு

vickneswaranவலி.கிழக்குப் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை சபையின் செயலாளர் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

வலி.கிழக்குப் பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையில் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது. இதனால் தவிசாளர் அ.உதயகுமார் பதவியிழந்திருந்தார்.

அத்துடன் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாமையால் ஊழியர்களுக்குரிய கடந்த மாதச் சம்பளம் வழங்குவதிலும் இடர்கள் ஏற்பட்டிருந்தன. இறுதியில் பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தினூடாக ஊழியர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி 1848/31 ஆம் இலக்க வர்த்தமானி மூலம், 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை செயலாளரிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கையளித்துள்ளார்.

Related Posts