Ad Widget

வலி. கிழக்குப் பிரதேசசபை ஊழியர்கள் சொல்லொணாத் துயரில்! அரச அதிகாரிகள் வேடிக்கை!

cash-money-paymentவலி. கிழக்குப் பிரதேசசபை ஊழியர்கள் 18 க்கும் அதிகமானோர் கடந்த 7 மாதங்களாக எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி பணியாற்றி வருவதாக தெரியவருகிறது.

கடந்த 2011 ம் ஆண்டு தவிசாளரால் வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில் சபையின் செயலாளரினால் வேண்டுமென்றே சம்பளக் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இருந்தும் நியமனங்கள் வழங்கப்பட்ட காலப்பகுதியில் சபையின் செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டிருந்தார்.

தற்சமயம் சபையின் செயலாளர் E.P.D.P யுடன் இணைந்து செயற்படுவதனாலேயே இவ் அவலநிலை தோன்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்ற சந்தேகம் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நியமனங்கள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினால் சபையின் தவிசாளரால் யாழ். உயர்நீதிமன்றில் சபையின் செயலாளர், உள்ளுராட்சி, மற்றும் உதவி உள்ளுராட்சி ஆணையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நீடித்துச் செல்வதனால் ஊழியர்கள் பலர் விரக்தி நிலைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிய வருகிறது.

மேலும் தவிசாளரால் வழங்கப்பட்ட நியமனங்களில் தற்சமயம் சம்பளக் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விதவைகள் அநாதைகள் ஓய்வூதியப் பங்களிப்புத் தொகைக்கான அட்டை (WNOP) கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts