Ad Widget

வட மாகாண உதைப்பந்தாட்ட அணியினர் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்கள்

football-team39வது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. வட மாகாணம் ஏனைய மாகாணங்களுடன் போட்டியிட தயாராகி வருகின்றது. இந்நிலையில் வட மாகாண உதைப்பந்தாட்ட அணியினர் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இவ்வணியில் வட மகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த சிறந்த வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றார்கள். இவர்களின் தேவைகளை இனங்காண்பதற்காகவே இன்றைய கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அணியின் வெற்றிக்காக ஆளுநர் வாழ்த்துத் தெரிவித்தார்.

வட மாகாண விளையாட்டு பணிப்பாளர் ராஜா ரணசிங்க, யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஆர்.மோகனதாஸ், மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட பயிற்சியாளர் எம்.எஸ்.எம்.ஜஸ்மின் மற்றும் விளையாட்டு திணைக்கள உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Related Posts