Ad Widget

வட மாகாண இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க ஆளுநர் நடவடிக்கை

Vocationalவட மாகாண இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகதத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இச்செயற்திட்டம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், தொழிற் பயிற்சி அதிகாரசபை என்பவற்றுடன் இணைந்து வட மாகாண சபையினால் முன்னெடுக்கப்படுகின்றது. வட மாகாண ஆளுநரின் வழிகாட்டலிலேயே இப்பயிற்சி நெறி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வட மாகாத்தினை சேர்ந்த 1000 இளைஞர்ர்களுக்கு மாதாந்தம் ரூபா 10,000.00 கொடுப்பனவுடன் மரவேலை, மேசன் வேலை, வீட்டு மின்சுற்று அமைத்தல், குழாய் இணைப்பு போன்ற தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சி நெறிகள் யூலை மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. ஆர்.வரதீஸ்வரன், வட மாகண தொழிற் திணைக்கள பணிப்பாளர் திரு.கே.சிவகரன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க உப தலைவர் கேணல் மடுகல்ல, தொழிற் பயிற்சி அதிகாரசபையின் உதவி பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

Related Posts