Ad Widget

வட்டு தெற்கில் சிசுவின் சடலம் மீட்பு; பெற்றோரை தேடி வலைவிரிப்பு

sisuவட்டுக்கோட்டை தெற்கு பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து ஆண் சிசு ஒன்றின் சடலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சடலத்தை பார்வையிட்ட மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சடலமாக மீட்கப்பட்ட இச்சிசுவின் பெற்றோரை கண்டுபிடிக்குமாறும் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சிசுவின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் துரித விசாரணை மேற்கொள்ளுமாறும் வைத்தியசாலைகளில் கடந்த வாரத்தில் பிறந்த குழந்தைகளின் விபரங்களை திரட்டுமாறும் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட சிசுவின் உடல்கூற்று பரிசோதனை தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் வினவியபோது, சடலமாக மீட்கப்பட்ட ஆண் சிசு பிறந்து 3 நாட்கள் ஆகியிருக்கின்றன என்றும் சிசுவின் தொப்புள் கொடியில் கிளிப் காணப்படுவதால்;, ஏதோ ஒரு வைத்தியசாலையில் பிறந்திருக்கலாம், அல்லது குடும்ப நல உத்தியோகத்தர்கள் மூலம் பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களின் விபரங்களை இணங்காணப்பட்ட பின்னரே சிசுவின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts