Ad Widget

வட்டுக்கோட்டை பொலிசார் தனக்கு அடித்ததாக நாடகமாடிய பல்கலைக்கழக மாணவன் ஐஸ் போதைக்கு அடிமை!!

வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை தாக்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் முறையிட்டது போலியான சம்பவம் என்பது உறுதியாகியுள்ளது. முறைப்பாடளித்த பலகலைக்கழக மாணவன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

பொலிசார் தன்னை காலில் பிடித்து தூக்கியடித்ததாக மாணவன் முறைப்பாடளித்துள்ள போதும், மாணவன் தாக்கப்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும், தடயமும் அவரில் இல்லையென்பதும் மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கு அண்மையாக கடமையிலிருந்த பொலிசார் தன்னை வழிமறித்ததாகவும், தான் கவனிக்காமல் சென்று, பின்னர் மீண்டும் திரும்பி வந்து அவர்களிடம் பேசியதாகவும், தன்னை மிரட்டியதாகவும், சற்று தொலைவில் சிவில் உடையில் வந்த பொலிசார் தன்னை பலவந்தமாக பொலிஸ் நிலையம் அழைத்து சென்று, தாக்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தார்.

பொலிசார் தன்னை காலில் பிடித்த தலைகீழாக தூக்கியடித்ததாகவும், தன்னால் மூச்சுவிட முடியாமலிருப்பதாகவும், பின்னர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பியோடி வந்ததாகவும் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருந்தார்.

மணவன் முறைப்பாடளிக்க வந்த போது, அவரது அசாதாரண நடத்தை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. அவர் மதுபோதை அல்லது போதைப்பொருள் பாவித்திருந்தாரா என்ற சந்தேகம் பொலிஸார் மட்டத்திலும் ஏற்பட்டிருந்தது.

இதை உறுதி செய்யும் விதமாக, அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாக பதிவு செய்த போதும், உடனடியாக விடுதியில் அனுமதியாகவில்லை. அவர் விடுதியில் அனுமதியாகவில்லையென்ற செய்தி நேற்று மாலை ஊடகங்கள் வெளிப்படுத்தியது. அதன் பின்னரே, அவர் விடுதியில் அனுமதியாகினார்.

மாணவன் சோடித்த முறைப்பாடளித்தார் என பொலிசார் நேற்ற தெரிவித்திருந்தனர்.

இது பற்றி தற்போது மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவன், பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக மோட்டார் சைக்கிளிலில் பயணிப்பதாக பாடசாலை நிர்வாகத்தினால் வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றும், பாதசாரி கடவையினால் மாணவிகள் பயணித்த போது, மோட்டார் சைக்கிளிலில் அச்சுறுத்தும் விதமாக விதி மீறிலாக பலகலைக்கழக மாணவன் பயணித்த போதே, பாடசாலைக்கு முன்பாக கடமையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் அவரை வழிமறித்துள்ளார்.

எனினும், நிற்காமல் சென்ற மணவன், பின்னர் பெண்ணொருவரை ஏற்றிக்கொண்டு திரும்பி வந்து, தம்முடன் தகராறில் ஈடுபட்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து பொலிசாரே வாகனங்களின் ஆவணங்களை சரிபார்க்கலாமென்றும் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததும், மேலதிக பொலிசார் வந்து, அவரை கைது செய்து, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கதிரையொன்றில் பல்கலைக்கழக மாணவன் உட்கார வைக்கப்பட்டுள்ளார். அப்போது, அழ ஆரம்பித்த மாணவன், திடீரென அங்கிருந்து தப்பியோடியதாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிசார் தாக்கியதாக முறைப்பாடளித்தார்.

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பியோடியது தவறான செயல், மீளவும் பொலிஸ் நிலையத்தில் சரணடையுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் அறிவுறுத்தினர்.

எனினும், அவர் பொலிஸ் நிலையம் செல்லாமல், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிசார் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டு சிகிச்சைக்காக பதிவு செய்தார். அவரை 24வது விடுதிக்கு செல்லுமாறு குறிப்பிட்ட போதும், அவர் அங்கு உடனடியாக செல்லவில்லை.

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பியோடியது, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதியாகாமை ஆகிய செயல்கள்- மாணவன் தொடர்பான சந்தேகத்தை பரவலாக ஏற்படுத்தியிருந்தது. அவர் மது அல்லது போதைப்பொருள் பாவித்திருந்ததால் பரிசோதனையை தவிர்க்கிறாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

அந்த சந்தேகம் உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல்கலைக்கழக மாணவன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அவர் ஐஸ் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது சிறுநீர் மற்றும் இரத்தம் பரிசோதிக்கப்பட்ட போது, இது உறுதியானது.

இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை கருதி, மாணவன் இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டார். இரண்டு முறையும் ஒரே முடிவே கிடைத்துள்ளது.

இதனால் மாணவன் கைது செய்யப்படவும், போதைப்பொருள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்படவும் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இதேவேளை, மாணவன் வெளிநாடு செல்வதற்காக பொலிஸ் அச்சுறுத்தல் நாடகம் ஆடினாரா என்ற சந்தேகமும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் இவ்வாறான காவாலிகளை தயவு தாட்சனியின்றி சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என சமூகநலன் விரும்பிகள் தெரிவிக்கின்றார்கள்.

Related Posts