Ad Widget

வட்டுக்கோட்டை பொதுச்சந்தை விவகாரம்: வலி.பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

sinthupuram-vaddukoddaiவட்டுகோட்டை சிந்துபுரம் பொதுச்சந்தையின் பெயரை மாற்றி வட்டுக்கோட்டை பொது சந்தை என பெயர் மாற்றம் செய்யுமாறு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமையானது, நீதிமன்றத்தை அவமதித்த செயல் என குற்றம் சுமத்த முடியும் என்று உயர்நீதிமன்றம், வலிகாமம் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் உத்தரவு காரணமாக 2006 ம் ஆண்டு வட்டுக்கோட்டை பொதுச் சந்தையின் பெயர் சிந்துபுரம் பொதுச் சந்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அடுத்த 48 மணிநேரத்தில் சிந்துபுரம் என்ற பெயரை நீக்கி விட்டு, வட்டுக்கோட்டை பொதுச்சந்தை என பெயர் மாற்றம் செய்யாது போனால், வலிகாமம் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும் என உயர்நீதிமன்றம் இன்று எச்சரித்துள்ளது.

வட்டுக்கோட்டை பொதுச்சந்தையின் பெயரை சிந்துபுரம் பொதுச் சந்தை என பெயர் மாற்றியமை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, பிரதேச மக்கள் தாக்கல் செய்த மனுவொன்றை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே உயர்நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Related Posts