Ad Widget

வடமாகாண விவசாய அமைச்சினால் உழவு இயந்திரம் அன்பளிப்பு

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் விவசாயத் தேவைகளுக்கென வடமாகாண விவசாய அமைச்சு சிறிய உழவு இயந்திரம் ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளது.

ainkaranesan (2)

யாழ் மாவட்டத்தில் வசிக்கும் முன்னூறுக்கும் மேற்பட்ட செவிப்புலன் அற்றோர் இணைந்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாகச் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்முயற்சிகளில் ஒன்றாகச் சிறுவிவசாயப் பண்ணை ஒன்றை நிர்வகித்து வரும் செவிப்புலன் வலுவற்றோர், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் சிறியரக உழவூர்தியைக் கோரி விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே, கண்டி வீதி, அரியாலையில் அமைந்துள்ள வடமாகாண விவசாய அமைச்சின் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (19.02.2014) இடம்பெற்ற வைபவத்தில் இச் சிறியரக உழவு இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தெரிவுசெய்யப்பட்ட பத்துப் பயனாளிகளுக்கு விவசாயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் நீரிறைக்கும் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

ainkaranesan (1)

வடக்குமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், கைதடி நவீல்ட் பாடசாலையின் அதிபர் மகேந்திரன் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டு உழவூர்தியையும், நீரிறைக்கும் இயந்திரங்களையும் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

Related Posts