வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்!

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாநாயக்க, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன ஆகிய இருவருக்கும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறீ முனசிங்க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கட்டுப்பிட்டிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு பொறுப்பாக நியமனம் பெற்றுள்ளார்.

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாநாயக்க, தென் மாகாணத்துக்கு பொறுப்பாக இடமாற்றப்பட்டுள்ளார். அவர் வடக்கு மாகாணத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட முன்னர் தென் மாகாணத்தில் கடமையாற்றியிருந்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார். அவர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு மாதத்தில் மீளவும் இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நால்வரும் வரும் 2ஆம் திகதி வியாழக்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றனர்.

Related Posts