Ad Widget

வடமாகாண சபை திறம்பட செயற்படுகிறதா? – சுரேஸ் எம்.பி

suresh-peramachchantheran‘வடமாகாண சபை உருவாக்கப்பட்டு 4 மாதங்களான நிலையில் வடமாகாண சபையினை திறம்பட நடத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக’ தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘வடமாகாண சபை நிர்வாகத்தினை திறம்பட நடத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

அத்துடன், ‘மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபையினை கைப்பற்றிய போதும் இந்த மாகாண சபையினை நகர விடாமல், கொண்டு செல்லும் அவலப் போக்கினை காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறு அரசாங்கம் வடமாகாண சபைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிப்புச் செய்கின்றது’ என்றார்.

‘இலங்கை அரசு நாங்கள் ஜனநாயகவாதிகள், வட மாகாணத்தில் ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கின்றது என்றால் மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையினை மதிக்க வேண்டும். அந்த பெரும்பான்மையினை கௌரவிக்க வேண்டும்.

வடமாகாண சபை நிர்வாகம் சரியாக நடைபெறாது அரசியல் பின்னடைவுடன் நடந்து வருகின்றதெனவும் வடமாகாண சபை நிர்வாகம் சரியாக நடைபெறவேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

‘வடமாகாண சபையின் நிர்வாகம் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை முதலமைச்சருக்கு இருக்கின்றது. ஜனாதிபதி உடந்தையாக இருந்து சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். முதலமைச்சர் முதலமைச்சரால் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வடமாகாண சபை நிர்வாகம் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கான பதில்கள் கிடைக்கப்படாத நிலையில், அண்மையில் ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடினார். அச்சந்திப்பிற்கான பதில்களும் இதுவரையில் கிடைக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காகவும், ஜெனீவா கூட்டத்தொடர் குறித்தும் சந்திப்பு இடம்பெறவில்லை என்றும் வடமாகாண சபை நிர்வாகம் குறித்து சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் வடமாகாண சபையினை திறம்பட நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதேசமயம், ஜெனிவா கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கும் பிரேரணைகள் கவனத்தில் எடுக்கப்படுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் எதிராக இருப்பார்கள்’ எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Posts