Ad Widget

வடமாகாண சபையை முடக்க அரசு தீவிர முயற்சி – விவசாய அமைச்சர்

ainkaranesanதமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின் கழுத்தை நெரிக்கும் செயற்பாடுகளையே மேற் கொண்டுவருகிறது.

அவற்றின் மூலம் தமிழ் மக்களுக்கும் தாம் எதையும் செய்யப் போவதில்லை என்பதையே அரசு கூறுகின்றது இவ்வாறு காட்டமாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்றுமுன் தினம் திறந்து வைக்கப்பட்ட விவசாயப் பீட திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ”விவசாய பீடம் கிளிநாச்சியில் உத்தியோக பூர்வமாக நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு விவசாய அமைப்பு சார்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. 1990ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் அழகையா துரைராஜாவின் முயற்சியால் விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான தற்காலிகமாக இயங்க ஆரம்பித்தது.

இன்று சொந்தமான இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வு மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகண சபையை சிறுமைப்படுத்தகின்ற நிகழ்சியாகவே கருதுகிறோம்.

அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அழைப்பிதழ் இல்லை.

ஆனால் விவசாயம் சார்ந்த பல்கலைக்கழகம் திறக்கும் போது பங்கேற்பு அதிகாரம் தொடர்பாக பேசப்படும் போது அது அவசியமாகக் கொள்ளப்படுகிறது. உயர்கல்வி அமைச்சர் முதலமைச்சரை அழைக்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்தமையால் தாம் அவரை அழைக்கவில்லை என்று பீடாதிபதி தெரிவித்திருந்தார்.

முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்காதபோது அமைச்சு சார்ந்த எம்மால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் நல்லெண்ணத்துக்கான சமிக்கையாகவே ஜனாதிபதியின் முன்னாள் முதலமைச்சர் பதவியேற்பு செய்து கொண்டார்.

அரசோ வடக்கு மாகாண சபையையும ஒட்டுமொத்த தமிழர்களையும் உதாசீனப்படுத்தும் செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொள்கிறது.

வடக்கு மாகாண சபையுடனும், தழிம் மக்களுடனும் நெருக்கமாக இருக்கின்றோம் என்று அரசு உலகுக்கு காட்டுகிறது. மறுகையால் எங்களது கழுத்தை நெரிப்பதாகவே கருதுகிறோம்.

மாகண சபைக்கான அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. அதனால் அதிகாரத்தை கொடுத்திருப்பதாகக் காட்டுவதற்கு அரசு இத்தகை செயல்களை செய்கிறது.

அதே போன்றே நேற்று கமநலசேவைகள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு பிரதி விவசாயப் பணிப்பாளரோ, மாகாண பணிப்பாளரோ அழைக்கப்பட வில்லை.

இவையயல்லாம் எங்களது அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதையே எடுத்துக் காட்டுகிறது.

இராணுவம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள எங்களது நிலங்களில் இருந்து முற்றாக வெளியேற வேண்டும். விவசாய நிலங்களிலும் மக்களது சொந்தக் காணிகளிலும் ஆக்கரமிப்பு செய்து, அத்துமீறி இருந்துகொண்டு விடுதலைப் புலிகளும் அவ்வாறுதான் செய்தார்கள், இருந்தார்கள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு போராட்ட அமைப்பை இராணுவத்துக்கு ஒப்பாகக் கருதுவது அவர்களது மடைமைத்தனம்.” என்று தெரிவித்தார்.

Related Posts