Ad Widget

யாழ்ப்பாணத்தில் பட்டம் ஏற்றும் விழா

Kites-flyingவடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் முதல் முறையாக மாகாண அபிவிருத்தியில் மக்களின் ‘பாரம்பரியங்களையும்,கலை,கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தின் பட்டம் ஏற்றும் விழா 21.06.2014 அன்று யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

கடந்த 30 வருடங்களால் மக்கள் இன்னல்களுக்கு மத்தியில் வடுக்களுடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மக்கள் அதனை மறந்து பாரம்பரியங்கள், பண்பாடுகளையும் வளர்க்கும் நோக்குடன் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் புதிய பரிணாமங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் ஊடாக சமுதாய அபிவிருத்தியை முன்னோக்கிய வடமாகாண ஆளுநரின் சிந்தனையிலும்,வழிநடத்தலிலும் பல்வேறு கருத்திட்டங்கள் தற்போது வடமாகாணத்தில் நடைபெற்றுவருகின்றன.

இதன் ஊடாக பட்டம் ஏற்றும் விழா ஆரம்பித்திருப்பதாக ஆளுநரின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதில் உள்ளுர்,மற்றும் வெளியூர் பட்டம் செய்யும் கலையில் புகழ்பெற்ற நிபுணர்களால் உருவாக்கப்பட்ட 100 வர்ணப்பட்டங்கள் ஒரே நேரத்தில் பறக்கவிடயிருப்பதாகவும் இதில் காலை,மாலை என இரு அமர்வுகளாக நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் காலை அமர்வாக பட்டம் கட்டுவது தொடர்பான பயிற்சி பட்டறையை தென் இலங்கை கலைஞர்கள் வழங்கயிருக்கின்றனர்.

மாலை அமர்வாக வர்ணப்பட்டங்கள் ஏற்றும் விழா இடம்பெறும் என ஆளுநரின்செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு விழாவை ஆரம்பித்து வைக்கயிருப்பதாகவும் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

Related Posts