Ad Widget

வடமாகாணத்தில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம்

வடமாகாணத்தில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை இதய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதய நோய்க்குரிய ஏதுநிலைக் காரணிகளின் ஒன்றாக நீரிழிவு நோய் இனம் காணப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் நீரிழிவு நோய் என்பது பாரிய பிரச்சினையாகவுள்ளது. ஆசிய நாடுகளிலேயே இலங்கையில் நீரிழிவு நோயாளிகள் அதிகம். அதிலும் வடமாகாணத்தில் நோயாளர்கள் அதிகளவில் உள்ளார்கள்.

மாரடைப்பு நோய்க்குரிய ஏதுநிலைக் காரணிகளாக நீரிழிவுநோய், கொலஸ்ரோல், இரத்தத்தில் கொழுப்பு படிதல், புகைத்தல் போன்ற பல்வேறு காரணிகள் உள்ளன.

நேரடியாக ஒரு நோயாளிக்கு இதயநோய் ஏற்படுவது என்பது குறைவு இந்த ஏதுநிலை காரணிகளே இந்நோயை தோற்றுவித்து வருகின்றது. இளவயதில் இதயநோய் ஏற்படுவதற்கு இந்த ஏதுநிலைக் காரணிகளே அடிப்படையாக அமைகின்றது.

தற்போது மக்கள் மத்தியில் சற்று விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முன்னர் மாரடைப்பு வந்த பின்னரே வைத்தியசாலைக்கு வருவார்கள். ஆனால் தற்போது நெஞ்சு நோ இருந்தாலே வைத்தியசாலையை நாடுகின்றார்கள்.

நீரிழிவு, கொலஸ்ரோல் நோயாளிகள் அடிக்கடி சோதனை செய்வதன் மூலம் ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சையளிக்கக் கூடியதாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Posts