Ad Widget

வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் – வடமாகாண ஆளுநர்

வடமாகாணத்தில் வாழும் சாதாரண மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு நிலையான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது எமது பொறுப்பும் கடமையுமாகும் என்று வடமாகாணத்தின் புதிய ஆளுநர் எச்.எம்.பி.எஸ். பளிகக்கார தெரிவித்தார்.

Pallikkara

வடமாகாணத்தில் வாழும் மக்களின் தேவைகளையும், அவர்களது எண்ணங்களையும் சரியான முறையில் அடையாளம் காண வேண்டும். நீண்ட காலமாக பல தரப்புக்களுடனும் செயற்பட்ட இவர்களது பிரச்சினைகளுக்கு அறிவு ரீதியாகவும், உளரீதியாகவும் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் எப்போதும் ஒவ்வொருவரையும் அன்பாகவும், நட்பாகவும் பாசத்துடன் பார்க்க வேண்டும். இந்நாட்டில் நாமெல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக செயற்படல் அவசியம். சமாதானத்தின் உண்மையான பிரதிபலன்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்குத் தடையாக அமைந்துள்ள காரணிகள் குறித்து ஆழமாக ஆராய்வது உகர்ந்தது.

நாம் சர்வசமய சகவாழ்வு, வேலைத் திட்டங்கள், கலாசார பரிமாற்றங்கள் என்பவற்றின் ஊடாக மக்களின் உள்ளங்களை சீரமைக்க வேண்டும். உடைந்த உள்ளங்களை ஆற்றுப்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான வழிகாட்டல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தற்போதைய அரசாங்கத்திலுள்ள அனைவரும் வழங்குகின்றனர். நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Related Posts