Ad Widget

வடக்கு மீனவர்களின் ஆலோசனையுடன் இந்திய மீனவ படகுகளை விடுவிப்பது குறித்து ஆராய்வு

இந்­திய மீன­வர்­களின் பட­கு­களை விடு­விப்­பது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இது தொடர்பில் வட­ப­குதி மீன­வர்­களின் ஆலோ­ச­னைகள் பெறப்­ப­டு­மென்றும் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

இது தொடர்­பாக கடற்­றொழில் நீரி­யல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர மேலும் தெரி­விக்­கையில்,

இலங்கை கடற்­ப­ரப்­பிற்குள் அத்­து­மீறி மீன்­பி­டித்த இந்­திய மீன­வர்­களின் கைப்­பற்­றப்­பட்ட பல பட­குகள் எம் வசம் உள்­ளன. வட பகு­தியின் மீனவச் சங்­கங்­களின் பிர­தி­நி­திகள் இணக்­கப்­பாடு தெரி­வித்தால் மட்­டுமே அந்த பட­குகள் விடு­விக்­கப்­படும்.

இந்­திய பிர­தமர் மோடியின் இலங்கை விஜ­யத்தின் போது இந்­திய மீன்­பிடிப் பட­கு­களை விடு­விப்­பது தொடர்பில் பேச்­சுக்கள் இடம்­பெ­றாது.

அத்­தோடு இப்­பி­ரச்­சினை தொடர்­பாக இந்­திய அரசு சாத­க­மான பல தீர்­மா­னங்­களை எடுத்­துள்­ளது. எனவேஇ இந்­திய மீன­வர்­களின் கைப்­பற்­றப்­பட்ட பட­கு­களில் சில­வற்றை விடு­விப்­பது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கி­றது.

இதில் பிழை­யெ­துவும் இல்லை. ஆனால் இவ்­வாறு பட­கு­களை விடு­விக்கும் போது வடக்கின் மீன்­பிடிச் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் பெறப்படும். எனவே இவ்விடயத்தில் சில விட்டுக்கொடுப்புத் தன்மை அவசியம் என்றார்.

Related Posts