Ad Widget

வடக்கு மாகாண தேர்தலுடன் ஈ.பி.டி.பி. ஆட்சிக்கும் முடிவு – கஜதீபன்

Kajatheepan-tnaவடமாகாண சபைத் தேர்தல் முடிந்ததும் ஈ.பி.டி.பியின் ஆட்சிக்கும் முடிவுகட்டப்பட்டு விடும். அதன் பின்னர் மக்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற ஆட்சியின் கீழ் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு சுதந்திரமாக நிம்மதியாக பீதிகளற்று வாழ முடியும்.இவ்வாறு அனலை தீவில் வைத்துத் தெரிவித்தார் வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணித் தலைவருமாகிய பா.கஜதீபன்.

அனலைதீவுக்கு நேற்றைய தினம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாள ரும், அனலைதீவு சதாசிவம் மகாவித்தியாலய ஆசிரியருமான பா.கஜதீபனுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு இடம்பெற்ற மக் கள் சந்திப்பில் உரையாற்றி னார் கஜதீபன்.

“கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின், ஆசிரிய மாணவர்களை கட்டாயப்படுத்தி ஈ.பி.டி. பியினர் தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அரச உத்தியோகத்தர்களை அடிமைகளாக இந்தக் கட்சிகள் தமது தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த மாதம் 21 ஆம் திகதியுடன் வடமாகாணத்தை நாம் ஆட்சிக்கு உட்படுத்திய பின்னர் இவர்களை ஓட ஓட விரட்டியடிப்போம்.

படித்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவம், நாட்டை அபிவிருத்தி செய்வதும் எல்லா அரசுகளதும் கடமை. அதனை இவர்கள் இதுவரை செய்யாமல் விட்டுவிட்டு இன்று ஏதோ அதிசயம் போல் கூறுகிறார்கள். உலகத்திலேயே எங்குமில்லாதவாறு,இங்கு வேலைவாய்ப்பையும், அபிவிருத்தியையும் சலுகைகளாகக் காட்டி வாக்குக் கேட்கின்றனர்.

நான் 8 ஆண்டுகளாகத் தீவகப் பிரதேசத்தில் கடமையாற்றியவன் என்பதால் எனக்கு உங்களின் வேதனைகள் நன்கு புரியும். ஓர் இருண்ட யுகத்துக்குள்ளே நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். நிச்சயமாக நாம் ஆட்சியமைத்ததும் துஷ்டர்களை விரட்டியடித்து உங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்துவோம் என்றார்.

அனலைதீவுப் பகுதியில், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கஜதீபனுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளருமான ப.தர்ஷானந்த் தலைமையில் 30 இளைஞர்கள் வீடு வீடாகப் பரப்புரை செய்தனர்.

Related Posts