Ad Widget

வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றம் குறித்து அமைச்சர் சுவாமிநாதனுடன் கூட்டமைப்பு பேச்சு!

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சருடன் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதியும் கலந்துகொண்டார்.

இதன்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, வாழ்வாதாரம், ஏனைய கருத்திட்டங்கள், கைத்தொழில் அபிவிருத்தி உள்ளடங்களான பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts