Ad Widget

வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் எம்மை பாதிக்காது : பஷில்

pasil-rajapakshaஅரசாங்கத்தைப் பொறுத்தவரை வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் அது எம்மை பாதிக்காது. எந்தவொரு முடிவும் அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தவும் போவதில்லை. வடக்கு என்பது அரசாங்கத்துக்கு ஒரு மாகாண சபை மட்டுமேயாகும். என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்குத் தேர்தல் விடயத்தில் ஏதாவது அநீதிகள் அநியாயங்கள் நடைபெற்றால் அது தொடர்பில் கூட்டமைப்பினர் முதலில் ஜனாதிபதியிடம் கூறலாம். பொதுநலவாய அமைப்பிடம் கூறுவதற்கு முன்னர் இந்த விடயங்கள் குறித்து முதலில் ஜனாதிபதியிடம் தெரிவித்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கில் ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களித்தால் அடுத்ததாக முதலமைச்சரை தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். ஆனால் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்தால் அந்த சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்காது போகும் என்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறினார்.

வடக்குத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை பாதுகாப்புத் தரப்பினர் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவதாக கூட்டமைப்பினர் பொதுநலவாய அமைப்பின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related Posts