Ad Widget

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு அனைத்து தரப்புக்களினதும் ஒத்துழைப்பு தேவையெனவும் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.

கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,வடமாகாணத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. குறிப்பாக கொலைச் சம்பவங்கள், பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்கள் குறைவடைந்து காணப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையைில் 2014ஆம் ஆண்டு ஐனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 391 படுகொலைகளும் 2015ஆம் ஆண்டு அதே காலப்பகுதியில் 336 படுகொலைகளும் பதிவாகியிருக்கின்றன.

ஆயினும் போதைப்பொருள் பயன்பாடு வடபகுதியில் அதிகம் காணப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக குறிப்பாக காங்கேசன்துறை பருத்தித்துறை பகுதிகளில் இருந்து போதைப்பொருட்கள் இலங்கைக்கு எடுத்து வரப்படுகின்றன.

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து இதுவரை 300 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளளோம்.

எனவே குற்றச்செயல்களை குறைப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்புக்களினதும் ஒத்துழைப்புக்களின் மூலமே நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts