Ad Widget

வடக்கில் நேற்று அரச ஊழியர்கள் எவரும் லீவு பெற தடை!- ஆளுநா் சந்திரசிறி கடுமையான உத்தரவு

GA Chandrasiriவடக்கில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போரை ஒடுக்க ஆளுநர் சந்திரசிறி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இதன் பிரகாரம் நேற்று அரச ஊழியர்கள் எவரும் வடக்கில் லீவு பெற தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் நேற்று கடமைக்கு சமூகமளித்துள்ள பணியாளர்களது வரவு பட்டியல்கள் மூன்று தடைவைகளாக தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும் அவர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தெரியவருகின்றது.

முன்னதாக நேற்று ஆளுநர் சந்திரசிறியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகாளல் அதிர்ச்சியுற்ற அதிகாரிகள் அத்தகவல்களை தமக்கு கீழுள்ள பணியாளர்களுக்கு அறிவித்ததுடன் லீவு விண்ணப்பங்கள் அனைத்தையும் நிராகரித்துள்ளனர்.

இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போரை ஒடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது என சட்டத்தரணிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

அப்போராட்டத்தில் கலந்து கொள்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு சட்ட ஆலோசனை வழங்கப்படும். போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவாக இலவசமாக குரல் கொடுக்கத் தயார் எனவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலவச அடிப்படையில் நீதிமன்றில் ஆஜராகி அவர்களுக்காக குரல் கொடுக்க தயங்கப் போவதில்லை என சட்டத்தரணிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

Related Posts