Ad Widget

வடக்கில் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு கண்டனம் தெரிவித்து வட பகுதி சட்டத்தரணிகள் மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பினால் வட பகுதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

நீதமன்றத்திற்கு வழக்குகளுக்காக வருகைதந்திருந்த பலர் சட்டத்தரணிகளின் பணி பகிஸ்கரிப்பினால் இன்று ஏமாற்றதத்துடன் வீடுகளுக்கு திரும்பினர்.

“பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டவரப்பட்ட குற்றப்பிரேரணை மற்றும் சுதந்திரமாக நீதிதுறை செயற்பட முடியாமை, பிரதம நீதியரசருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவரும் தரம் குறைந்த வார்த்தை பிரயோகங்கள் என்பவற்றை கண்டித்து எமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் வட பகுதி சட்டத்தரணிகள் நாளை மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தவுள்ளனர் அத்துடன் எமது போராட்டத்தையும் அதீவிரப்படுத்துவோம்” என தெரிவித்தார்.

அத்துடன் யாழ்.சட்டத்தரணிகள் சங்கத்தினரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 4 நாள் பணிப்புறக்கணிப்பின் முதல் நாளான இன்று சட்டத்தரணிகள் மன்றிற்கு சமூகமளிக்காமையினால் வழக்கு விசாரணைக்கு வந்த மக்கள் மன்றில் காத்திருந்து விட்டு வீடுக்கு திரும்பினர்.

வெளிமாவட்டங்களில் இருந்து; தாம் பல சிரமங்களுக்கு மத்தியில் நீதிமன்றங்களுக்கு வந்தபோதும் நீதிமன்ற செயற்பாடுகள் நடைபெறாத காரணத்தினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் நீதிமன்றத்துக்கு வருகைதந்த மக்கள் தெரிவித்தனர்.
எனினும்,யாழ். மேல் நீதிமன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts