Ad Widget

வடக்கில் சிறுவர்கள் கூட சுதந்திரமாக வாழ முடியவில்லை – கஜேந்திரன்

kajenthiranவடக்கிலே சிறுவர்கள் கூட சுதந்திரமாக வாழ முடியாத நிலை காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரால் 11 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையினை எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (18) காரைநகர் பிரதேச செயலகம் முன்றலில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 60 வருடங்களாக இந்த மண்ணிலே சிங்கள அரசு எதனை செய்து வந்ததோ அதனையே இன்றும் செய்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் இந்தப் படைகள் தமிழர் பிரதேசங்களில் நிலைகொண்டு இருந்து இவ்வாறான செயல்களை செய்து வருகின்றன. இதனாலேயே நாம் இங்கிருந்து படையினர் வெளியேற வேண்டும் எனக் கூறி வருகின்றோம்.

காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திடம் சொல்லி இருக்கின்றார்,இந்த பிரச்சினையை இத்தோடு விட்டு விடுங்கள் என்று.

நாங்கள் இந்த மண்ணிலே சிறுவர்கள் கூட சுதந்திரமாக வாழமுடியாத நிலை காணப்படுவதாக கூறி போராடிக்கொண்டு இருக்கையில், அரசின் அடிவருடிகளாக செயற்படுபவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.

பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினரின் தாய்க்கோ தமக்கைக்கோ தங்கச்சிக்கோ இவ்வாறான நிலை ஏற்பட்டு இருந்தால் அவர் அந்த பிரச்சனையை அப்படியே விட்டு இருப்பாரா?

ஒருவேளை அவர் அப்படி விட்டு இருக்கக்கூடும். ஏனெனில் அவர் தன் இனத்தையே காட்டிக்கொடுக்கும் போது கூட்டிக் கொடுப்பவராகவும் இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts