Ad Widget

வடக்கில் உள்ளவர்கள் எதை செய்தாலும் குறை கூறுகின்றார்கள்.- விக்கினேஸ்வரன்

‘வடக்கு-தெற்கிற்கான உரையாடல்’ என்ற தொனிப்பொருளில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ஊடக மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிங்களவர்களின் மனதில் வைராக்கியம்
விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்களவர்களின் மனதில் வைராக்கியம் உள்ளது. இதனால் தான் வடக்கில் உள்ளவர்கள் எதை செய்தாலும் குறை கூறுகின்றார்கள்.
 
சொந்த காணியில் இராணுவம்
மக்களின் காணிகளில் இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். நாட்டில் ஏனைய இடங்களில் இவ்வாறு மக்களின் இடங்களை இராணுவத்தினர் ஆக்கிரமிக்கவில்லை.
தமிழ் மக்கள்
தமிழ் மக்களுக்கு என்று பூர்வீகம் கலாசரம் மொழி சமயம என அனைத்தும் உள்ளது. இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு உள்ள சகல உரிமைகளும் எமது மக்களுக்கும் கிடைக்க வேண்டும். இதனையே நாம் கூறி வருகின்றோம்.
நாட்டை பிரிக்க போகிறோம் என்கிறார்கள்
புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த நாம் வலியுறுத்தியுள்ளோம். நன்கு படித்தவர்களுக்கே சமஷ்டி என்பதன் அர்த்தம் புரியும். ஆனால் சமஷ்டி தொடர்பில் தெரியாதவர்ளே நாட்டை பிரிக்க சதி செய்வதாக கூறுகின்றார்கள்.
சமஷ்டி என்பது ஐக்கியம் படுத்துவது என்பதாகும். ஆனால் தெற்கில் உள்ளவர்கள் நாட்டை பிளவுப்படுத்த போகிறோம் என்கிறார்கள். எமக்கு சமஷ்டி ஆட்சியை தர மறுத்தால் அதற்கு பதிலாக என்ன செய்ய முடியும் என்பதை யோசிப்போம்.
மாவீரர் தினம்
மாவீரர் தினம் கொண்டாடுவதை ஒரு பிரச்சினையாக கொள்ள முடியாது. மாவீரர் தினம் என்பது உயிரிழந்த தங்களது உறவுகளின் ஆத்ம சாந்திக்காக அவர்களை நினைவுகூறும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு நினைவு தினமாகவே நாம் கருதுகின்றோம்.
ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைபுலிகளின் மீது உள்ள வைராக்கியம் இதனை வேறு கோணங்களில் பார்க்க தூண்டுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஏன் உருவானது?
விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாவதற்கு முன்னரே தமிழர்களின் பிரச்சினை இருந்து வந்ததுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையிலேயே விடுதலைப்புலிகள் உருவாகும்நிலை எற்பட்டது. இப்போதும் கூட விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகிவிடுமோ என்று எண்ணுகின்றவர்கள் வடக்கு மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யவது என்று எண்ணவில்லை.
வடக்கு மக்களின் பிரச்சினைகள் நிவர்த்திசெய்யப்படுமாயின் இவ்வாறன எண்ணங்களுக்கு, சிந்தனைகளுக்கும் இடமில்லாமல் போய்விடும்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு
ஜனாதிபதியுடனான சந்திப்பில் 9 மாகாணங்களிலும் உள்ள முதலமைச்சர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
குறித்த சந்திப்பின் போது வட மாகாணத்தின் நிதி பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி இம்மாத இறுதிக்குள் குறித்த விடயத்துக்கான தீர்வை பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்.
இராணுவத்தை முற்றாக நீக்கவும்
வடக்கில் உள்ள இராணுவத்தை முற்றாக நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக இரண்டு மடங்கு பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இராணுவத்தினர் வடக்கு மக்களின் காணிகளை தம்வசப்படுத்தியுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் தெற்கில் இடம்பெறுவதில்லை. அது மாத்திரமின்றி தெற்கில் பொலிஸாரின் கட்டுபாட்டில் இருக்கும் எந்த ஒரு பகுதியிலும் அதிகளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதில்லை, குற்றச்செயல்கள் இடம்பெறுவதில்லை.
ஆனால் வடக்கில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சேவையில் இருந்தும் இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

Related Posts