Ad Widget

வடக்கில் இராணுவ பிரசன்னத்தால் மக்கள் பேசுவதற்கே அஞ்சுகின்றனர்: விக்னேஸ்வரன்

vicknewaran-tnaவடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னமானது கூட்டமைப்பின் பிரசாரத்திற்கு பெரும் தடையாக உள்ளது. நாம் பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் எம்முடன் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். இவ்வாறான ஒரு கடும்போக்கான நிலையே காணப்படுகின்றது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்கள் இடம் பெற்று வருகின்றன. நேற்று முன்தினம் சாவகச்சேரி பகுதியில் நாம் பிரசாரத்தில் ஈடுபட்டோம். சாவகச்சேரி நவீன சந்தைப்பகுதியில் நாம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது எம்முடன் பேசுவதற்கு மக்கள் அச்சப்பட்டனர். ஏனென்றால் இராணுவத்தினரின் பிரசன்னமே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

என்னுடன் பேசிய பலரும் அங்குமிங்கும் பார்த்தவண்ணமே பேசினர். அங்கே இராணுவத்தினர் நிற்கின்றனர். மறுபக்கத்தில் அவர்களின் ஆட்கள் நிற்கின்றனர். என்று அவர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். இவ்வாறான நிலையே குடாநாட்டில் நிலவுகின்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்தவாரம் வெளியிடப்படும். இதற்கானப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

Related Posts