Ad Widget

வடக்கில் இராணுவத்தினர் நிலைகொள்வதையே சுமந்திரனும் விரும்புகின்றார்!

வடக்கில் விசேட அதிரடிப்படையினரை பணியில் அமர்த்துவது தொடர்பாக வடக்கில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தவண்ணமேயுள்ளன. சில கட்டுக்கடங்காத நிலமை ஏற்படும்போது விசேட அதிரடிப்படையினரை பணியில் அமர்த்துவதில் தவறில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு வடக்கில் பணியில் விசேட அதிரடிப்படையினரை பணிக்கமர்த்துமாறு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டமைக்கு பலரிடமிருந்து பல எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. இதனயைடுத்து குறித்த விடயம் தொடர்பாக சுமந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நீதிபதி இளஞ்செழியன் நியாயம் தவறி ஒருபோதும் செயற்படவில்லை. குற்றங்கள் இடம்பெறும்போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பலம் போதவில்லையென்றால் அதனை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என பணிப்புரை விடுப்பது ஒரு நீதிபதியின் நடவடிக்கையே.

இதேபோல்தான் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை நடந்தபோது நீதிமன்றத்தின்மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது நான் விசேட அதிரடிப்படையினரை பணிக்கமர்த்துமாறு காவல்துறை மா அதிபரிடம் கோரியிருந்தேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காரணம், அவர்கள் வராவிட்டால் அந்த இடத்தில் இராணுவத்தினரைத்தான் வரவழைக்கவேண்டிவரும். இராணுவத்தினர் வெளியில் வந்தால் அதை வைத்து பலர் குழப்பம் உண்டாக்க முயற்சிக்கின்றனர். எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts