Ad Widget

வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: முக்கிய பகுதிகளில் விசேட கண்காணிப்பு

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் வடக்கின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது. எனினும் விரைவில் சோதைனைகளை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவுள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடனும் பேசிவருகின்றேன்.

எமக்கு இதுவரை 4 அநாமதேய கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் அவற்றில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு நாம் கூடிய பாதுகாப்பினை வழங்கியுள்ளோம்.

இதனிடையே, இவ்வாறு அநாமதேய கடிதங்களை எழுதுபவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுப்போம்” என்று தெரிவித்தார்.

Related Posts