Ad Widget

ரெலிக்கொம் தொலைபேசி சேவை இன்று வழமைக்கு

கடந்த சில தினங்களாகச் செயலிழந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் குடாநாட்டுக்கான கேபிள் தொலை பேசி இணைப்புகள் இன்று வியாழக்கிழமை வழமைக்குத் திரும்பும் என ரெலிக்கொம் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.யாழ்.பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் தொலைத் தொடர்புக் கோபுரம் மீது கடந்த ஞாயிறன்று இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. இதனால் அந்தக் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு “டிஸ் அன்ரனாக்கள்’ முற்றாகச் செயலிழந்ததுடன் பரிவர்த்தனை அலகு ஒன்றும் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகிப் பழுதடைந்தது.

இதனால் குடாநாட்டுக்கான கேபிள் தொலைபேசி இணைப்புகளில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கடந்த நான்கு நாள்களாகச் பேசி இணைப்புகளைச் சீர் செய்வதற்குக் கொழும்பில் இருந்து தொழில்நுட்பவியலாளர் குழு ஒன்று நேற்றுப் புதன் கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்தது. அத்துடன் சீர் செய்வதற்கான உபகரணங்களும் கொழும்பில் இருந்து எடுத்துவரப்பட்டன. நேற்று முற்பகல் முதல் தொலை பேசி இணைப்புகளைச் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்றன.

பெரும்பாலும் இன்று முதல் தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பும் என ரெலிக்கொம் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.கேபிள் தொலை பேசி இணைப்புகள் செயலிழந்துள்ள போதும் ரெலிக்கொம் நிறுவனத்தின் சி.டி.எம்.ஏ. தொலைபேசி இணைப்புகள் செயல்படுகின்றன.கேபிள் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துள்ளமை காரணமாக கடந்த மூன்று தினங்களாக அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts